நாடளாவிய ரீதியில் மூன்று முதல் ஐந்து மணித்தியால மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் இன்று (18) வெள்ளிக்கிழமை திட்டமிட்ட மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

A,B,C,D,E,F,G,H,J,K மற்றும் L  ஆகிய பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 3 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை ஒரு மணி நேரம் 40 நிமிடம் மின்வெட்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கிடையில், P, Q, R, S, T, U, V மற்றும் W ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரமும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு மணி நேரம் 15 நிமிடமும் மின்வெட்டு ஏற்பட உள்ளது.

மின்சாரத் தடையை அமுல்படுத்துமாறு இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.




நாடளாவிய ரீதியில் மூன்று முதல் ஐந்து மணித்தியால மின்வெட்டு நாடளாவிய ரீதியில் மூன்று முதல் ஐந்து மணித்தியால மின்வெட்டு Reviewed by Editor on March 18, 2022 Rating: 5