பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்று (05) சனிக்கிழமை மாலை கண்டி, டொரிங்டன் ஜார்ஜ் எ டீ சில்வா பார்க் முன்பாக அனைத்து மக்களின் பலத்த ஆதரவுக்கு மத்தியில் நடைபெற்றது.
பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் கையெழுத்து போராட்டம் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக தமிழ் மக்கள் அதிகளவில் வாழும் பகுதிகளில் இதற்கு மிகப்பாரியளவில் இதற்கு ஆதரவு கிடைத்திருந்தது என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன், முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித்தலைவர் திரு. சேயோன், சிவில் சமூக பிரதிநிதிகள், மதத்தலைவர்கள் பொது மக்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை கண்டியில்..
 
        Reviewed by Editor
        on 
        
March 05, 2022
 
        Rating: