இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்த அன்ஜாஸல்லாஹ்

நிந்தவூர் 12ம் பிரிவைச் சேர்ந்த டாக்டர். மீராசாஹிபு அன்ஜாஸல்லாஹ் தனது மூன்று வருட சத்திர சிகிச்சை முதுமானிப் பட்டப் பின்படிப்பை நிறைவுசெய்து கொழும்பு பல்கலைக்கழகத்தின் வைத்தியத்துறை பட்டப்பின்படிப்பு நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்தார்.

அத்துடன் அவருக்கான இறுதிப்பரீட்சையின் பெறுபேற்று அடிப்படையில் சிறந்த மாணவராகத் தெரிவு செய்யப்பட்டு டாக்டர் உபாலி பானகல ஞாபகர்த்த தங்கப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

2017ம் வருடம் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வைத்தியத் துறைக்கான பட்டப்பின்படிப்பு நிறுவகத்தால் நடத்தப்பட்ட சத்திரசிகிச்சை முதுமானிப் பட்டப்பின்படிப்புக்கான பரீட்சையில் தெரிவுசெய்யப்பட்ட ஒரேயொரு முஸ்லிமாவார்.

இவர் தற்போது ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில்  எலும்பு முறிவு சத்திரசிகிச்சை நிபுணராக கடமையாற்றுகிறார்.

இவரது சிறந்த அடைவினால் தனது வைத்தியத் துறையில் விசேட கல்வியை மேற்கொள்ள அடுத்த வருடமளவில் இங்கிலாந்து செல்லவுள்ளார்.

ஏற்கெனவே இவரது குடும்பத்தில் டாக்டர். றஸீன் ஆதம் அவர்கள் சத்திரசிகிச்சை நிபுணராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டாக்டர் அன்ஜாஸல்லாஹ் அவர்களுக்கு நிந்தவூர் - எனது மண் சார்பில் வாழ்த்துக்கள்.

தகவல் : ஏ. ஷபாஅத் அஹமட்

(SM. SAHABDEEN - நிந்தவூர் செய்தியாளர்)




இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்த அன்ஜாஸல்லாஹ் இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்த அன்ஜாஸல்லாஹ்  Reviewed by Sifnas Hamy on March 04, 2022 Rating: 5