(றிஸ்வான் சாலிஹு)
Iconic Youths சிறிலங்கா அமைப்பின் "கல்விக்கு கரம் கொடுப்போம்" எனும் செயற்திட்டத்தின் 2022ஆம் கல்வியாண்டிற்கான கற்கை உபகரணங்கள் வழங்கி வைக்கும் முதலாவது கட்ட நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) அக்கரைப்பற்று பதுர் நகர் மத்ரசதுல் அத்பலில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
Iconic Youths அமைப்பின் தலைவர் யூ.எல் தில்ஷான் அவர்களின் வழிகாட்டுதலில், அமைப்பின் செயற்பாட்டாளர் ஹிமாத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் செயலாளர் அப்றத் அஹமட், பொருளாளர் அஸ்கர், உறுப்பினர்கள், மெளலவி அல்-ஹாபீழ் யாக்கூப், ஆலோசகர்களான எம்.எஸ்.எம்.றிஸ்வான் மற்றும் எம்.ஏ.எல்.இப்திகார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் தலைமையுரையாற்றிய அமைப்பின் தலைவர் தனதுரையில்,
இக்கற்கை உபகரணங்கள் கல்வியில் ஆர்வம் கொண்ட வறுமையான மாணவர்களை தெரிவு செய்து வழங்கியுள்ளதாகவும், மாணவர்களாகிய நீங்கள் எதிர்காலத்தில் சிறந்த நற்பிரஜையாகவும், சிறந்த கல்வியலாளர்களாகவும், ஒழுக்கமுள்ள மாணவர்களாக உருவாக வேண்டும் என்றும், இது போல் தாங்களும் எதிர்வரும் காலங்களில் ஏனைய சகோதரர்களுக்கும் உதவ வேண்டும் என்பது தான் இந்த உபகரணங்களை வழங்க பண உதவி செய்தவர்களின் நோக்க என்றும் கூறினார்.
தெரிவு செய்யப்பட்ட 31 மாணவ மாணவிகளுக்கு இவ்வருட கல்வியாண்டிற்கு தேவையான கற்கை உபகரணங்கள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.
இச்செயற்திட்டத்திற்கு எல்லா வழிகளிலும் பண ரீதியாக உதவி செய்த தனவந்தர்களுக்கும் அதே போன்று இரவு பகல் பாராது அயராது உழைத்த Iconic Youths அமைப்பின் அங்கத்தவர்களுக்கும் தங்களுடைய நன்றிகளையும் பாராட்டுக்களையும் அல்- மத்ரசதுல் அத்பல் தலைவர் மெளலவி அல்-ஹாபீழ் யாக்கூப் தனதுரையில் தெரிவித்தார்.
Reviewed by Editor
on
March 22, 2022
Rating:













