பாராளுமன்ற அமர்வு 10.00மணிக்கு ஆரம்பம்

பாராளுமன்ற அமர்வு இன்று (19) செவ்வாய்க்கிழமை மு.ப. 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதோடு மு.ப. 10.00 மணி முதல் மு.ப 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மற்றும் விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. 

அதனை அடுத்து, பி.ப. 4.30 மணி முதல் பி.ப. 4.50 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், பி.ப. 4.50 மணி முதல் பி.ப. 5.30 மணிவரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெறும் என்று நாடாளுமன்ற ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.




பாராளுமன்ற அமர்வு 10.00மணிக்கு ஆரம்பம் பாராளுமன்ற அமர்வு 10.00மணிக்கு ஆரம்பம் Reviewed by Editor on April 19, 2022 Rating: 5