ஜப்பானியத் தூதுவரை சந்தித்த அமைச்சர் ஹாபிஸ் நஸீர்

சுற்றாடல் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் நேற்று (27) ஜப்பானியத் தூதுவரை அமைச்சில் வைத்து சந்தித்து கலந்துரையாடினார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் குறித்து இச்சந்திப்பில்  கூடிய கவனம் செலுத்தப்பட்டது. மேலும், புதுப்பிக்கத்தக்க வலுவை, சுற்றாடல்துறையில் பயன்படுத்துவது குறித்த ஆலோசனைகள் குறித்தும் அமைச்சர் அளவளாவினார்.

இச்சந்திப்பில் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் டாக்டர். அனில் ஜேசிங்க மற்றும் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.





ஜப்பானியத் தூதுவரை சந்தித்த அமைச்சர் ஹாபிஸ் நஸீர் ஜப்பானியத் தூதுவரை சந்தித்த அமைச்சர் ஹாபிஸ் நஸீர் Reviewed by Editor on April 28, 2022 Rating: 5