நாட்டில் தற்போது பரபரப்பான அரசியல் மாற்றங்கள் இடம்பெற்று வருகின்ற, இதேவேளை அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களும் இரவு பகலாக தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று வருகின்றன.
இந் நிலையில் புதிய அமைச்சரவையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை ஆளும் தரப்பு மட்டுமன்றி எதிர்த் தரப்பினரும் தற்போதைய நிலை தொடர்பில் விசேட கூட்டங்களைக் கூட்டி ஆராய்ந்து வருகின்றனர்.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் தற்போது விசேட கூட்டமொன்றை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடாத்தி வருகின்றனர்.
இதேவேளை குறித்த விசேட கூட்டத்தில் பல முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
(தினக்குரல்)
Reviewed by Editor
on
April 04, 2022
Rating:
