அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் பிரதி அதிபராக கடமையாற்றி வந்த ஏ.சீ.எம்.ஹரீஸ் அவர்கள் செவ்வாய்க்கிழமை (05) தொடக்கம் பாடசாலையின் தற்காலிக அதிபர் பொறுப்பை பொறுப்பேற்றுள்ளார்.
அட்டாளைசேனை தேசிய பாடசாலைக்கு கல்வியமைச்சின் மூலம் கடந்த வருடம் நிரந்தர நியமனம் பெற்று கடமையேற்ற அதிபர் எம்.எஸ்.நபார் அவர்கள் தனிப்பட்ட காரணங்களால் வேறு பாடசாலைக்கு தற்காலிக நியமனம் பெற்றுச்சென்றதன் காரணமாக இவர், தற்காலிக அதிபர் பொறுப்பை பொறுப்பேற்றுள்ளார்.
அட்டாளைசேனையை பிறப்பிடமாக கொண்ட இவர், விஞ்ஞானப்பாட ஆசிரியராக நியமனம் பெற்று கல்வித்துறையில் காலடி வைத்து கலைமானிப்பட்டம் (கிழக்கு பல்கலைக்கழகம்), பட்டப்பின் கல்வி டிப்ளோமா உயர் சித்தி (கொழும்பு பல்கலைக்கழகம்), கல்வி முதுமானி பட்டப்பின் பட்டம் (கிழக்கு பல்கலைக்கழகம்) போன்றவைகளை பெற்றார்.
Reviewed by Editor
on
April 07, 2022
Rating:

