சுகாதார பராமரிப்பு நடவடிக்கைகளை பகுப்பாய்வு செய்ய சுகாதார அமைச்சின் உயரதிகாரிகள் அக்கரைப்பற்றுக்கு விஜயம்
(சியாத் எம் இஸ்மாயில்)
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சுகாதார பராமரிப்பு மற்றும் தர முகாமைத்துவ செயற்பாடுகளை பகுப்பாய்வு செய்வதற்காக சுகாதார அமைச்சின் சுகாதார பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் தரம் ஆகியவற்றின் பிரிவினரால் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை அண்மையில் மேற்கொண்டனர்.
வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எச்.எம். ஆஸாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சுகாதார அமைச்சின் சுகாதார தர முகாமைத்துவ நிபுணர் டாக்டர் நிமல் கரந்த கொடவினால் வைத்தியசாலையின் சுகாதார பராமரிப்பு மற்றும் தர பாதுகாப்பு பிரிவினது வழிகாட்டலினூடாக இங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளர்களுக்காக வழங்கப்பட்ட சுகாதார சேவைகள் மற்றும் வைத்தியசாலை சுகாதார பணியாளர்களுக்காக வழங்கப்பட்ட நலனோம்பல் செயற்பாடுகள் தொடர்பான தரவுகள் சேகரிப்பு, பகுப்பாய்வு மற்றும் ஆவணப்படுத்தல் செயற்பாடுகள் தொடர்பாகவும் பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டதோடு, விடுதிகள் மற்றும் பிரிவுகளுக்கு பொறுப்பான தாதிய மற்றும் ஏனைய பொறுப்பு உத்தியோகத்தர்களுக்கான தெளிவூட்டல் கருத்தரங்கு பயிற்சி செயலமர்வுகளும் நடைபெற்றது.
வைத்தியசாலையின் தர முகாமைத்வவப் பிரிவின் பொறுப்பு வைத்தியர் டாக்டர் எம்.எம். தாஸிம், திட்டமிடல் பிரிவிற்கான பொறுப்பு வைத்தியர் டாக்டர் ஆகில் அகமட் சரீப்டீன் உள்ளிட்ட வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் ஏனையோர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் ஞாபகர்த்தமாக மரக்கன்று ஒன்றும் அதிதிகளால் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
.jpg)