(றிஸ்வான் சாலிஹு)
அக்கரைப்பற்று பிரதேசத்தில் வசதி குறைந்த தேவையுடையோருக்கு ஐகோனிக் யூத்ஸ் மற்றும் இன்ஸ்பிரீன் யூத்ஸ் ஆகிய சமூக சேவை அமைப்புகள் இணைந்து ரமழான் கால உலர் உணவுப் பொருட்கள் திங்கட்கிழமை (11) வழங்கி வைக்கப்பட்டது.
அதனடிப்படையில், 5000 ரூபா பெருமதியான உலர் உணவுப் பொதிகள் வாங்காமம் சபா கிராமம் மற்றும் ஸக்காத் கிராமத்திலுள்ள சுமார் 260 ஏழைக் குடும்பங்களுக்கு இந்த பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இதை போன்று இன்னும் 1000 ஏழைக் குடும்பங்களுக்கு இப்பொதிகள் வழங்க ஏற்பாடு செய்துள்ளதோடு, இவைகளை பெற்றுத் தந்ந நன்கொடையாளர்களுக்கு இந்த அமைப்புக்கள் நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வீடு தேடிச்சென்று ரமழான் உலர் உணவு பொருட்கள் வழங்கும் அக்கரைப்பற்று இளைஞர்கள்
Reviewed by Editor
on
April 13, 2022
Rating:
