அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி கையெழுத்திட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் கூட்டணியாக நாமே இதை கொண்டு வருகிறோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ மனோ கணேசன் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
இந்த, "நம்பிக்கையில்லா" பிரேரணை என்பது ஜனாதிபதி, பிரதமர் ஆகிய தனிநபர்களுக்கு எதிரானது என காட்டி தப்ப எவரும் முயல கூடாது.
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு எதிராகவும் நாம் பிரேணைகளை கொண்டு வருகிறோம்.
ஆனால், இது முதலில் முழு அரசாங்கத்துக்கு எதிரானதாகும்.
அரசாங்கத்திலிருந்து வெளியே வந்ததாக சொல்லும் அனைவரும் இதை ஆதரிக்க வேண்டும்.
ஆகவே எவரும் மக்களை முட்டாளாக்க முதல் கூடாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
