(சர்ஜுன் லாபீர்)
கல்முனை லீடர் அஸ்ரப் பெடரேசனின் வருடாந்த இப்தார் நிகழ்வும்,டி சேர்ட் அறிமுக நிகழ்வும் கல்முனை ஆஸாத் பிளாஸா மண்டபத்தில் அமைப்பின் தலைவரும், தொழிலதிபருமான யூ.எல் நெளபர் தலைமையில் இன்று (15) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு கல்முனை மாநகர முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம் ரக்கீப், கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி, கல்முனை முஹைத்தீன் ஜும்மா பெரிய பள்ளிவாசல் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ அஸீஸ், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம்.ரோஸன் அக்தார் ,ஏ,சி.ஏ சத்தார், ஏ.எம் பைறோஸ்,பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்களின் பிரத்தியேக செயலாளர் நெளபர் ஏ.பாவா, இணைப்புச் செயலாளர் எம்.ஏ சப்றாஸ் நிலாம், கல்முனை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் இஸட்.ஏ.எம் அஸ்மீர், கல்முனை பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் எம்.ஜெயிஸான், டாக்டர் எ.சி எம் அமீன், சட்டத்தரணி சாரீக் காரியப்பர், அமைப்பின் போசகர்கள், அமைப்பின் ஆலோசகர்கள், அமைப்பின் உயர் பீட முகாமைத்துவ சபை உறுப்பினர்கள், அமைப்பின் அங்கத்தவர்கள், பாடசாலை அதிபர்கள், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிற அமைப்புகளின் பிரதிநிதிகள், ஊடகவியளாலர்கள், அமைப்பின் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
மெளலவி அல்ஹாஜ் பி.எம்.ஏ ஜலீல்(பாகவி) அவர்களினால் சிறப்பு மார்க்க சொற்பொழிவு இடம்பெற்றதோடு, அமைப்பின் டீ சேர்ட் உத்தியோகபூர்வமாக கல்முனை பிரதேச செயலாளரினால் அறிமுகம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Reviewed by Editor
on
April 15, 2022
Rating:




