பைத்துல் ஹிக்மா கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற இப்தார் நிகழ்வு

(றிஸ்வான் சாலிஹு)

பைத்துல் ஹிக்மா கல்வி நிறுவனத்தில்  இவ்வாண்டிற்கான வருடாந்த இப்தார் நிகழ்வு, நிறுவனத்தின் கேட்போர்கூடத்தில் வியாழக்கிழமை (21) கல்வி நிறுவனத்தின் தலைவரும், உதவிக் கல்விப்பணிப்பாளருமான கலாநிதி ஹனீபா இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது.

இக்கல்வி நிறுவனத்தின் மூலம் 2022ஆம் ஆண்டு க.பொ.த. உயர் தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், அஷ்ஷேக் நைஸர் மெளலவி அவர்களின் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில் கல்வி நிறுவனத்தின் செயலாளர், பொருளார், ஆலோசகர், நிர்வாகிகள், மாணவ மற்றும் மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
















பைத்துல் ஹிக்மா கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற இப்தார் நிகழ்வு பைத்துல் ஹிக்மா கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற இப்தார் நிகழ்வு Reviewed by Editor on April 22, 2022 Rating: 5