(றிஸ்வான் சாலிஹு)
இளைஞர்கள் மத்தியில் உள்ளக விளையாட்டுத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் அக்கரைப்பற்று மாநகர சபையின் நிதியொதுக்கீட்டில், அக்கரைப்பற்றில் உள்ளக அரங்கிற்கான ஆரம்ப கட்ட வேலைகள் தற்போது மிகவும் துரித கதியில் இடம்பெற்று வருகின்றது.
இப்பகுதியில் உள்ளக அரங்கு இல்லாத கவலையை இல்லாமல் செய்யும் நோக்கில் இதற்கான வேலைத்திட்டங்களை மாநகர சபை கவனத்தில் எடுத்து, அதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாஉல்லா மற்றும் அக்கரைப்பற்று மாநகர முதல்வர் ஏ.அஹமட் ஸகி ஆகியோர் இணைந்து அண்மையில் ஆரம்பித்து வைத்தார்கள்.
அக்கரைப்பற்றில் அமைக்கப்படும் உள்ளக அரங்கு
Reviewed by Editor
on
April 28, 2022
Rating:
