அம்பலத்தாறு பிரதேச குடும்பங்களுக்கு றமழான் கால உணவுப்பொதிகள் வழங்கல்

(றிஸ்வான் சாலிஹு)

புனித றமழான் மாதத்தில் வறுமையான குடும்பங்களைச் சேர்ந்த உறவுகளுக்கு தேவையான உலர் உணவுப்பொதிகளை Iconic Youths மற்றும் Inspiring Youths அமைப்பு தொடர்ந்தும் வழங்கி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக அம்பலத்தாறு பிரதேசத்தை சேர்ந்த 60 குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகள் ஞாயிற்றுக்கிழமை ( 24) வழங்கி வைக்கப்பட்டது.

இந்த புனிதமிகு மாதத்தில் ஒரு ஏழைக் குடும்பத்தின் கண்ணீர் துடைக்க நிதி ரிதியாகவும் பொருள் ரீதியாகவும் உதவி செய்தவர்களுக்கும், இதனை உரியவர் கைகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டுமன அயராது உழைத்த சமூகசேவை மனப்பாங்குடைய இளைஞர்களுக்கும், களப்பணி புரியும் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் Iconic Youths அமைப்பு நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.










அம்பலத்தாறு பிரதேச குடும்பங்களுக்கு றமழான் கால உணவுப்பொதிகள் வழங்கல் அம்பலத்தாறு பிரதேச குடும்பங்களுக்கு றமழான் கால உணவுப்பொதிகள் வழங்கல் Reviewed by Editor on April 24, 2022 Rating: 5