உடன் அமுலுக்கு வரும் வகையில் ரம்புக்கனை பொலிஸ் பிரிவில் ஊடரங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று (19) ரம்புக்கனை புகையிரத கடவைக்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது ஏற்பட்ட மோதல் நிலையைத் தொடர்ந்து பொலிஸாரினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, ஒருவர் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்துள்ள நிலையில் இதனையடுத்து அப்பகுதியில் தொடர்ந்து அமைதியின்மை நிலவி வந்ததால் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரம்புக்கனை பொலிஸ் பிரிவில் பொலிஸ் ஊரடங்கு அமுல்
Reviewed by Editor
on
April 19, 2022
Rating:
