நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது உள்ளிட்ட அரசியலமைப்பில் புதிய திருத்தம் ஒன்றை முன்வைக்கும் பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகரிடம் கையளித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதற்கான பிரேரணையை கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவிடம் இன்று (21) காலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கையளித்தார்.இதனையடும் இந்த பிரேரணை கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவினால் இன்று காலை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்தல், 20வது திருத்தத்தை ரத்து செய்தல், சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுதல் மற்றும் தேசிய பாதுகாப்பு சபையை ஸ்தாபித்தல் உள்ளிட்ட பல ஜனநாயக அம்சங்கள் இந்த பிரேரணையில் அடங்கியுள்ளன.
அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான பிரேரணை சபாநாயகரிடம்
Reviewed by Editor
on
April 21, 2022
Rating:
