அடையாள வேலை நிறுத்தத்தினால் முற்றாக முடங்கிய நகரம்

அரசுக்கெதிராக நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துவரும் அடையாள வேலை நிறுத்ததிற்கு அட்டன் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தமது ஆதரவை தெரிவிக்கும் வகையில் இன்று (28) வியாழக்கிழமை சேவை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. 

இதனால் அட்டன் நகரிலிருந்து சேவையிலீடுபடும் உள்ளக  மற்றும் வெளிமாவட்ட  போக்குவரத்து சேவை முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது என அட்டன் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் இராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  

இதேவேளை இன்றைய போராட்டத்திற்கு ஆதரவாக அட்டன் நகர வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளமையானால் அட்டன் நகர் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.








அடையாள வேலை நிறுத்தத்தினால் முற்றாக முடங்கிய நகரம் அடையாள வேலை நிறுத்தத்தினால் முற்றாக முடங்கிய நகரம் Reviewed by Editor on April 28, 2022 Rating: 5