(றிஸ்வான் சாலிஹு)
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் சிறுதொழில் முயற்க்ஷஅபிவிருத்தி பிரிவினரால் ஒழுங்கமைப்படும் உள்ளூர் முயற்சியாளர்களின் ஆக்கபூர்வமான படைப்பு கண்டுபிடிப்புகளால் வடிவமைக்கப்பட்ட "விவசாய 2022" சந்தைப்படுத்தல் மற்றும் கல்வி கண்காட்சி வெள்ளிக்கிழமை (01) காலை 10.00 மணியளவில் வைபவ ரீதியாககொழும்பு BMICH இல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மூன்று நாட்கள் (01,02,03) தொடர்ச்சியாக நடைபெறும் இந்த வர்த்தக கண்காட்சியில் அம்பாரை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பழ வகைகளை உள்ளடக்கிய ஜூஸ் வகைகள் மற்றும் புது வகையான இன்னும் பல தயாரிப்புகளை தயாரித்து நாடு பூராகவும் விநியோகம் செய்யும் Dlight நிறுவனம் கலந்து கொள்வது பாராட்டக்கூடிய விடயமாகும்.
இந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளரான யூ.முஹம்மட் தில்ஷான் வியாபார மற்றும் சந்தைப்படுத்தல் துறையில் பல வருட அனுபவமும் பெற்றிருப்பது அவரின் தொழிற்துறைக்கு வெற்றியை சாதகமாக்கி கொடுத்துள்ளதோடு, இவர் ஓர் இளம் தொழில் முயற்சியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
