(றிஸ்வான் சாலிஹு)
அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) 2022ஆம் ஆண்டின் புதிய கல்வியாண்டிற்குள் நுழையும் தரம்-06 மாணவர்களை உள்ளீர்க்கும் "புதிய சிறகுகள்" நிகழ்வு, பாடசாலையின் அதிபர் ஜனாப். எஸ்.றிபாயுடீன் அவர்களின் தலைமையில், பாடசாலை அதாஉல்லா ஆர்ட் கலரியில் புதன்கிழமை (18) நடைபெற்றது.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிமனையின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.அஹமட் கியாஸ் கெளரவ அதிதியாகவும், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், உலமாக்கள்,நலன்விரும்பிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
பெற்றோர்கள் பாடசாலையில் நேரடி தொடர்பு கொண்டவராக இருக்க வேண்டும். பாடசாலை ஆசிரியரிடம் பெற்றோர்கள் மாணவர்களின் அன்றாட கல்வி தொடர்பில் கேட்டறியப்படல் வேண்டும். பிள்ளைகளிடம் ஒவ்வொரு நாளும் நடக்கும் பாடத்திட்டங்களை பெற்றோர்கள் கண்டறிவதனால் தான் மாணவர்கள் எதிர்காலத்தில் கல்வியில் அதிக புள்ளிகளைப் பெற்று முன்னிலை வகிப்பார் என்பதுடன் மாணவர்களின் எதிர்கால கல்வி நடவடிக்கையில் தொடர்பில் பெற்றோர் மத்தியில் கெளரவ அதிதி தனதுரையில் தெரிவித்தார்.
Reviewed by Editor
on
May 20, 2022
Rating:









