புதிய வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஜனாதிபதி அவர்களின் முன் புதிய வெகுசன ஊடக அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட கலாநிதி பந்துல குணவர்தன அவர்கள், அதற்கு சிறிது நேரத்தின் பின்னர் பொல்ஹேன்கொட வெகுசன ஊடக அமைச்சிற்கு வருகை தந்து உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதற்கு முன்னரும் வெகுசன ஊடக அமைச்சராக பதவி வகித்த கலாநிதி குணவர்தன, வெகுசன ஊடக அமைச்சுப் பதவிக்கு மேலதிகமாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சராகவும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் மற்றும் மேலதிக செயலாளர்கள் உட்பட அதிகாரிகள் பலர் புதிய அமைச்சர் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
