கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின்படி, வீட்டு எரிவாயு சிலிண்டரை கொலன்னாவ வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலன்னாவை வெல்லம்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள பேக்கரி ஒன்றிலேயே இந்த எரிவாயு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் பொலிசார் நடத்திய சோதனையில், 40 கேஸ் சிலிண்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
கேஸ் சிலிண்டரை வாங்கும் வகையில் போலீசார் சென்று இவர்களை கைது செய்துள்ளனர்.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் அன்சலம் டி சில்வாவின் தலைமையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டு எரிவாயுவை அதிக விலைக்கு விற்பனை செய்த இடம் முற்றுகை
Reviewed by Editor
on
May 21, 2022
Rating:
