ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ அவர்களை இன்று (21) சனிக்கிழமை எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
தற்போது இலங்கை முகங்கொடுத்திருக்கும் நெருக்கடி நிலைவரத்திலிருந்து மீட்டெடுப்பது, அதற்குத் தேவையான மூலோபாய மற்றும் தந்திரோபாய ரீதியான ஆதரவைப் பெறுதல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது அவருடன் நீண்ட நேரம் கலந்துரையாடினார்.
ஹனா சிங்கர் 27 வருடங்களாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தில் சேவையாற்றியுள்ளதோடு,தெற்காசியா உட்பட பல்வேறு பிராந்தியங்களில் 15 ஆண்டுகளுக்கும் மேலான மனிதாபிமான உதவித் துறை சார்ந்து சிரேஷ்ட நிர்வாக அனுபவத்தைக் கொண்ட ஒரு இராஜதந்திரி ஆவார்.
