(றிஸ்வான் சாலிஹு)
அரசினால் சுகாதார ஊழியர்களின் சம்பள குறைப்பு சம்பந்தமான சுற்று நிருபத்தை மீறி குறித்த ஒரு பிரிவினருக்கு முழுமையாக சம்பளத்தை செலுத்தியும் ஏனைய ஊழியர்களுக்கு குறைப்பு செய்தும் வழங்கிய அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின வைத்திய அத்தியட்சகர் மற்றும் கணக்காளர் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் தாதியர்கள் மருத்துவ ஆய்வு கூட தொழிநுட்பவியலாளர்கள், மருந்தாளர்கள், கதிர் இயக்க தொழிநுட்பவியலாளர்கள், இயன் மருத்துவ உத்தியோகத்தர்கள் உட்பட பல்வேறு ஊழியர்கள் இணைந்து வியாழக்கிழமை (26) வைத்தியசாலையின் முன்றலில் கவனயீர்ப்பு போரட்டத்தில் ஈடுபட்டனர்.
தமக்கு வெட்டப்பட்டுள்ள சம்பளக் கொடுப்பனவுகள் இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படாதவிடத்து தாம் தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் கலந்து கொண்டோர் தெரிவித்துள்ளனர்.
