(நூருல் ஹுதா உமர்)
சாய்ந்தமருது பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவராக அல்- மீஸான் பௌண்டசன் ஸ்ரீலங்காவின் செயற்குழு உப தலைவரும், குரு ஊடக வலையமைப்பின் தவிசாளருமான அம்பாறை மாவட்ட நிஸ்கோ பணிப்பாளர் சபை உறுப்பினருமான ப்ரவ் இளைஞர் கழகத்தலைவர் ஊடக செயற்பாட்டாளர் ஹிஷாம் ஏ பாவா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை (20) சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் சாய்ந்தமருது பிரதேச இளைஞர் சேவை அதிகாரி எம்.எம்.சமீலுல் இலாஹி தலைமையில் 2022 ஆம் ஆண்டுக்கான பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் புணரமைக்கப்பட்டது.
இதில் செயலாளராக பதவி வழியில் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி எம்.எம்.சமீலுல் இலாஹி தெரிவுசெய்யப்பட்டதுடன் மேலும் ஏ.எம்.ஜப்ரான் உப தலைவராகவும், என்.எம். சியாம் உப செயலாளராகவும் ஏ.எம். அஸ்லம் சிப்னாஸ் அமைப்பாளராகவும், எஸ்.ஏ.எம். அஸ்லம் பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
இந் நிகழ்வில் அதிதிகளாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக், அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி எம்.எம். முபாறக் மற்றும் இளைஞர் பயிற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரி எம்.டி.எம். ஹாறுன், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.றிஹான் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
Reviewed by Editor
on
May 22, 2022
Rating:
