சாய்ந்தமருது அரச சேவை ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்தின் வருடாந்தக் கூட்டம்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது பிரதேச அரச சேவை ஓய்வூதியர்கள் நம்பிக்கை நிதியத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் நேற்று சனிக்கிழமை (21) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

நிதியத்தின் தலைவர் அல்ஹாஜ் எம்.ஐ.அப்துல் ஜப்பார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

அத்துடன் அம்பாறை மாவட்ட அரச சேவை ஓய்வூதியர்கள் நம்பிக்கை நிதியத்தின் செயலாளர் ஏ.உதுமாலெப்பை கௌரவ அதிதியாகவும் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம்.பளீல், ஓய்வூதியப் பிரிவுக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர் ரி.சாஜிதா, நிதி உதவியாளர் ஏ.சி.முஹம்மட் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில், மரணித்த உறுப்பினர்களுக்காக மௌலவி எம்.எம்.அஹமட் அவர்களினால் விசேட துஆப் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் அரச சேவை ஓய்வூதியர்களின் நலன்கள் தொடர்பில் பல்வேறு வகையான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டு, கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டதுடன் பிரேரணைகளும் நிறைவேற்றப்பட்டன. இறுதியாக நடப்பாண்டுக்கான நிர்வாகிகள் தெரிவும் இடம்பெற்றது.






சாய்ந்தமருது அரச சேவை ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்தின் வருடாந்தக் கூட்டம் சாய்ந்தமருது அரச சேவை ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்தின் வருடாந்தக் கூட்டம் Reviewed by Editor on May 22, 2022 Rating: 5