(றிஸ்வான் சாலிஹு)
அக்கரைப்பற்று காதிரிய்யா கல்வி மேம்பாட்டு மையமானது இப்பிரதேச மாணவர்களின் சுயகற்றலை உக்குவித்து மேம்படுத்தும் நோக்கில் காதிரிய்யா ஜூம்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்துடன் இணைந்து நடாத்தும் மாலை நேர சுய கற்றல் நிகழ்ச்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (20) அஸர் தொழுகையைத் தொடர்ந்து காதிரிய்யா பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது.
காதிரிய்யா ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் எஸ்.ரீ.அப்துல் அஸீஸ் அவர்களின் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் அஷ்ஷேக் ரீ.எம்.எம்.அன்ஷார் அவர்களும், விசேட அதிதியாக அக்கரைப்பற்று வலயக் கல்வி பணிமனையின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜீ.பஸ்மில் அவர்களும், கல்வியலாளர்கள், உலமாக்கள், புத்திஜீவிகள், அமைப்பின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பிக்கும் வரலாற்று சிறப்புமிக்க இந்நிகழ்விற்கு அனைவரையும் ஏற்பாட்டுக்குழுவினர் அன்புடன் அழைக்கின்றார்கள்.
Reviewed by Editor
on
May 20, 2022
Rating:
