சிறுபிள்ளை வைத்திய நிபுணர் எஸ்.எம். அஷ்ஹருக்கு சேவை நலன் பாராட்டு விழா

(சியாத் எம். இஸ்மாயில்)

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிறுபிள்ளை வைத்திய நிபுணராக கடமையாற்றி  பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு  இடமாற்றமாகி செல்லும்  வைத்திய நிபுணர் எஸ்.எம். அஷ்ஹருக்கான  சேவை நலன் பாராட்டு விழா வைத்தியசாலையின் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் தலைவர் வைத்தியர் ஏ.ஜி.எம்.ஷயீ  தலைமையில் வைத்திய அத்தியட்சகர் காரியாலயத்தில் (18) புதன்கிழமை நடைபெற்றது. 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஆஸாத் எம் ஹனிபா கலந்து கொண்டு ஞாபகச்சின்னம் மற்றும் நினைவுப்பரிசு வழங்கிவைத்ததுடன்,   நலன்புரிச்சங்கத்தின் முன்னாள் தலைவரும் வைத்தியருமான  ஏ.சீ அப்துல் ரஷாக்,  செயலாளர்  ஏ.சி.நகீப், பொருளாளர் எஸ்.பர்னாஸ் மற்றும் நலன்புரிசங்கத்தின் உறுப்பினர்களான  முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஏ.றிபாஸ், பரிசாரகர்  பி.ரி.சிஹாப்தீன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.




சிறுபிள்ளை வைத்திய நிபுணர் எஸ்.எம். அஷ்ஹருக்கு சேவை நலன் பாராட்டு விழா சிறுபிள்ளை வைத்திய நிபுணர் எஸ்.எம். அஷ்ஹருக்கு சேவை நலன் பாராட்டு விழா Reviewed by Editor on May 19, 2022 Rating: 5