சிறுவர் அபிவிருத்தி நிலைய சுற்று மதிலுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

(இர்ஸாத் இமாமுதீன்)

றவ்ழத்துல் அத்பால் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் சுற்று மதிலுக்கான அடிக்கல் ஞாயிற்றுக்கிழமை (22) அல்ஹிக்மத்துல்  உம்மா பௌண்டேஷனின் தலைவர் கஸ்ஸாலி முகம்மது பாதிஹ்  அவர்களினால் நடப்பட்டது.

றவ்ழத்துல் அத்பால் சிறுவர் அபிவிருத்தி நிலையமானது மூதூர் பிரதேசத்தில் அமைந்துள்ள தாய் தந்தையற்ற பிள்ளைகளை பராமறித்து அவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு வழிகாட்டுமிடமாகும்.

இந்நிலையமானது நீண்டகாலமாக சுற்று மதிலின்றி காணப்பட்டது. இதனால் பிள்ளைகளுக்கு பாதுகாப்பற்ற அசௌகரிய நிலை காணப்பட்டது. இந்நிலையை சமூகசேவையாளரும் அல்ஹிக்மதுல் உம்மா பௌண்டேஷனின் தலைவருமான கஸ்ஸாலி முகம்மது பாதிஹ்  அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்ததிற்கமைய உடனடியாக அதற்கான நடவடிக்கையை துரிதமாக மேற்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.






சிறுவர் அபிவிருத்தி நிலைய சுற்று மதிலுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு சிறுவர் அபிவிருத்தி நிலைய சுற்று மதிலுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு Reviewed by Editor on May 22, 2022 Rating: 5