அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று -17ஆம் பிரிவு ஏ.வீ.வீ வீதியில் உள்ள எம்.ஏ.எம்.ரெனீஸ் மற்றும் முஹம்மது ரெனீஸ் சுமையா தம்பதிகளின் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் இனந்தெரியாத நபர்களினால் செவ்வாய்க்கிழமை (19) சேதமாக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இந்த வீட்டில் உள்ள தம்பதி மற்றும் அவர்களுடைய மூன்று பிள்ளைகளும் தங்களுடைய குடும்பத்தின் நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக வெளியூர் ஒன்றுக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தை பார்த்து இனந்தெரியாத நபர்கள் வீட்டில் நுழைந்து முதலில் ஜன்னல் கண்ணாடிகளை மிக மோசமாக தாக்கியுள்ளனர். இச்சத்தத்தை கேட்ட அயலவர்கள் வந்த போது இந்நபர்கள் இவ்விடத்தை விட்டு தப்பியோடியுள்ளதாக அயலவர்கள் தெரிவித்திருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளையும், இவர்களை அடையாளம் காண்பதற்கான ஏற்பாடுகளையும் அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
        Reviewed by Editor
        on 
        
July 21, 2022
 
        Rating: 
 
