(றிஸ்வான் சாலிஹு)
அட்டாளைச்சேனை-10, அரபா பாடசாலை வீதியைச்சேர்ந்த முஹம்மட் நியாஸ் அப்துல்லா நசீப் அவர்கள் சட்டத்தரணியாக உயர் நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் இன்று (05) வெள்ளிக்கிழமை காலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இவர், தனது ஆரம்ப கல்வியை அக்கரைப்பற்று அரசினர் ஆண்கள் முஸ்லிம் பாடசாலையிலும், இடைநிலை மற்றும் உயர்தரக் கல்வியை அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்திலும் (தேசிய பாடசாலை), தனது சட்டமானி பட்டத்தை (LLB) ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திலும் பெற்றார்.
சிறந்த தலைமைத்துவ பண்பும், பேச்சாற்றலும், நல்லொழுக்கமும் கொண்ட இவர், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு புகைப்படக் கலைஞர்களுக்கிடைய நடாத்தப்பட்ட புகைப்படப்போட்டிகளில் பல பரிசில்களை பெற்ற சிறந்த புகைப்படக்கலைஞராவார்.
இவர், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் மெளலவி முஹம்மட் நியாஸ் அவர்களின் கனிஷ்ட புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
