(றிஸ்வான் சாலிஹு)
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை காரணமாக அக்கரைப்பற்றில் மிகவும் கஷ்டங்களுக்கு மத்தியில் வாழும் மக்களின் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு அக்கரைப்பற்று ஸகாத் நிதியம், ஜம்இய்யத்துல் உலமா சபை, அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம், மாநகர சபை, பிரதேச சபை, சமூக நிறுவனங்கள், இளைஞர் கழகங்கள் ஒன்றிணைந்து உணவு நெருக்கடிக்கான அவசரகால நிவாரணப் பணி அக்கரைப்பற்றில் ஆரம்பித்து வைத்து அதன் மூலம் பாரிய முன்னேற்றமடைந்துள்ளது.
இப்பிரதேசத்தில் 2000 தொடக்கம் 5000 வரையான குடும்பங்களுக்கு ஊர் மக்கள் ஒன்றினைந்து உதவியளிக்கும் இச்செயற்திட்ட பணிக்கு "Akkaraipattu APEC International" அமைப்பின் அங்கத்தவர்களால் சேகரிக்கப்பட்ட ரூபா. 1,215,000.00 (One Million two hundred fifteen thousand) நிதியுதவி இன்று வெள்ளிக்கிழமை (05) அக்கரைப்பற்று ஸகாத் நிதிய காரியாலயத்தில் வைத்து ஏற்பாட்டுக்குழுவினரிடம் கையளிக்கப்பட்டது.
APEC International அமைப்பு, இவ்வூரின் கல்வி, கலை கலாச்சார, சுகாதார, விளையாட்டு, சமூக நலத்தேவைகளுக்கு முடியுமான வரை நிதியுதவி வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
