(றிஸ்வான் சாலிஹு)
தொழில் நுட்பக் கல்விப் பயிற்சித் திணைக்களத்தின் சிபார்சின் பேரில் பொதுச்சேவைகள் ஆணைக்குழுவினால் இலங்கை தொழில் நுட்பக் கல்விச் சேவையின் முதலாம் தரத்தை சேர்ந்த எம். சோமசூரியம் அவர்கள் அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரிக்கு புதிய அதிபராக நியமனம் செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை (04) கல்லூரியில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பைச் சேர்ந்த இவர், சம்மாந்துறை, அக்கரைப்பற்று மற்றும் மட்டக்களப்பு தொழில்நுட்ப கல்லூரிகளில் இதற்கு முன்னர் அதிபராக கடமையாற்றி அனைவரினதும் நன்மதிப்பை பெற்றவராவார்.
புதிதாக நியமனம் பெற்ற அதிபரை, கல்லூரியின் முன்னாள் அதிபர் எம்.பீ.எம்.சிறாஜ், பதிவாளர் ஐ.பியாஸ், பகுதித் தலைவர்கள், விரிவுரையாளர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் மாலையிட்டு வரவேற்று கெளரவித்தமை குறிப்பிடத்தக்கது.
