மட்டக்களப்பு நீர்வழங்கல் சபை முகாமையாளர் காரியாலய வாணி விழா

(றிஸ்வான் சாலிஹு)

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் காரியாலயம் ஏற்பாடு செய்த வாணி விழா நிகழ்வு செவ்வாய்க்கிழமை (04) கல்லடியிலுள்ள முகாமையாளர் காரியாலயத்தில், பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் எம்.குமாரதாஸ் தலைமையில் இடம்பெற்றது.

வாணி விழா நிகழ்வின் பூஜை வழிபாடுகள் மற்றும் உபதேசங்களை  கல்லடி சித்தி விநாயகர் ஆலய குருக்கள் லிகிதராஜ் குருக்கள் நிகழ்த்தினார்.

இவ்வழிபாட்டு நிகழ்வில், மட்டக்களப்பு முகாமையாளர் காரியாலயத்தின் பொறியியலாளர்கள், நிலையைப் பொறுப்பதிகாரிகள், வாணிப உத்தியோகத்தர், சமூகவியலாளர், பொறியியல் உதவியாளர்கள், பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.











மட்டக்களப்பு நீர்வழங்கல் சபை முகாமையாளர் காரியாலய வாணி விழா மட்டக்களப்பு நீர்வழங்கல் சபை முகாமையாளர் காரியாலய வாணி விழா Reviewed by Editor on October 05, 2022 Rating: 5