பேராசிரியர் மர்ஹூம் கே.எம்.எச். காலிதீன் நினைவு கல்வி நிலையம் திறப்பு

IHH அனுசரணையுடன் அல்ஹித்மதுல் உம்மா பௌண்டேசனின் ஏற்பாட்டில் பேராசிரியர் மர்ஹூம் கே.எம்.எச்.காலிதீன் நினைவு கல்வி நிலையம் ஞாயிற்றுக்கிழமை (09) திறந்து வைக்கப்பட்டது.

இந்நினைவுக் கட்டடம் நிகழ்வின் பிரதம அதிதி IHH BELGIUM நிறுவனத்தின் பிரதிநிதி செய்புள்ளாஹ் கொச் இனால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் விசேட அதிதியாக அல்ஹித்மதுல் உம்மா பௌண்டேசனின் தலைவர் கஸ்ஸாலி முகம்மட் பாத்திஹ் கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் ஏனைய அதிதிகளாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் கல்விப் பணிப்பாளரும் அல் மத்ரசத்துல் காதரியா நிறுவகத்தின் தலைவருமான சட்டத்தரணி ஏ.ஸீ.எம்.முஸ்இல், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் அல் மத்ரசத்துல் காதரியா நிறுவகத்தின் உப தலைவருமான அஷ்ஷெய்ஹ் ஹபீபுல்லா, காதரியா ஜும்ஆப் பள்ளிவாயல் தலைவர் ஆங்கில ஆசிரியர் எஸ்.ஏ.எஸ்.அமானுல்லாஹ், அல் அஹ்ழா வித்தியாலயத்தின் அதிபர் கே.பிர்தௌஸ் ஆகியோருடன் பல பிரமுகர்களும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

மர்ஹூம் பேராசிரியர் கே.எம்.எச். காலிதீன் அவர்கள் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் கல்வி ஆளுமையும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உருவாக்குனர்களில் ஒருவருமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.







பேராசிரியர் மர்ஹூம் கே.எம்.எச். காலிதீன் நினைவு கல்வி நிலையம் திறப்பு பேராசிரியர் மர்ஹூம் கே.எம்.எச். காலிதீன் நினைவு கல்வி நிலையம் திறப்பு Reviewed by Editor on October 09, 2022 Rating: 5