(றிஸ்வான் சாலிஹு)
அக்கரைப்பற்றில் கடந்த வெள்ளிக்கிழமை (07) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்ட "அக்கரைப்பற்று புத்தகக்காட்சி-2022" நிகழ்வின் மூன்றாவது நாளான இன்று (09) ஞாயிற்றுக்கிழமை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் வருகை தந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவர்களை புத்தகக்காட்சி ஏற்பாட்டுக்குழுத் தலைவரும் எழுத்தாளருமான சிறாஜ் மஸ்ஊர் வரவேற்று ஞாபகார்த்தமாக நூல் ஒன்றும் அவருக்கு அன்பளிப்பாக வழங்கி வைத்தார்.
நாடாளுமன்ற உறுப்பினருடன் முஸ்லிம் காங்கிரஸ் அதியுயர் பீட உறுப்பினர் ஏ.எல்.தவம், முன்னாள் காத்தான்குடி நகர சபை தவிசாளர் மற்றும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் வருகை தந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
October 09, 2022
Rating:




