அம்பாரை மாவட்ட அரச சார்பற்ற அமைப்புக்களின் இணையத்தினால் கடந்த 2005 ஆண்டு தொடக்கம் 2011 ஆண்டு காலப்பகுதிகளில் திட்ட உத்தியோகத்தராகச் சேவையாற்றிய அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஊடகவியலாளரும், அபிவிருத்தி உத்தியோகத்தருமான சியாத்.எம். இஸ்மாயில் தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கரினால் ஞாபகச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அம்பாரை மாவட்ட அரச சார்பற்ற அமைப்புக்களின் இணையத்தின் தவிசாளர் வி.பரமசிங்கம் தலைமையில் அட்டாளைச்சேனை தனியார் கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்ற இந்நிகழ்வின் போதே இக் கெளரவம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி. ஜெகதீஸன், சம்மாந்துறை மற்றும் ஆலையடி வேம்பு பிரதேச செயலாளர்களான எஸ்.எல்.எம். ஹனிபா, வி.பபாகரன் மற்றும் அம்பாரை மாவட்ட வலயக் கல்விப் பணிப்பாளர்கள், நிறுவன பிரதிநிதிகள், புத்திஜிவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Reviewed by Editor
on
October 06, 2022
Rating:
