(றிஸ்வான் சாலிஹு)
சர்வதேச தற்காப்பு கலைச்சங்கம் மற்றும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம் இணைந்து நடாத்திய, சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவன் அஸ்ரப் நுஸ்கி பெற்று பாடசாலை சமூகத்திற்கு பெருமை தேடி கொடுத்துள்ளார்.
இந்நிகழ்வு சனிக்கிழமை (01) இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி ரமீஸ் அபூபக்கர் கலந்து கொண்டு சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நுஸ்கி
Reviewed by Editor
on
October 05, 2022
Rating:
