(நூருல் ஹுதா உமர்)
தேசிய காங்கிரசின் இளைஞர் அமைப்பாளரும், அல்- மீஸான் பௌண்டஷன் இணைப்பாளருமான கல்முனை மாநகர சபை உறுப்பினர் சமட் ஹமீடின் எண்ணத்தில் உதித்த "ஒளிரும் கல்முனை" வேலைத்திட்டம் கடந்த பல மாதங்களாக மருதமுனை, பாண்டிருப்பு, பெரிய நீலாவணை போன்ற பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பல மாதங்களாகவும், வருடக்கணக்கிலும் ஒளிராமல் இருக்கும் தெரு மின்விளக்குகளை மீள ஒளிரச்செய்யவும், புதிதாக மின்விளக்குகளை பொருத்தவும் மாநகர சபை உறுப்பினர் சமட் ஹமீட் "ஒளிரும் கல்முனை" வேலைத்திட்டத்தினூடாக நடவடிக்கை எடுத்து வருகின்றார்.
தேசிய காங்கிரசின் சார்பில் மாநகர சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள சமட் ஹமீட், வட்டாரம், இனம், மதம், பிரதேசம் என்ற பாகுபாடுகளின்றி கல்முனை மாநகர உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் உதவியுடன் இந்த திட்டத்தை முன்னெடுத்து வருகின்றார். இதன்மூலம் பல சட்டவிரோத செயற்பாடுகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கும் மக்கள் சமட் ஹமீட் முன்னெடுத்திருக்கும் இந்த வேலைத்திட்டத்தை பாராட்டுகின்றனர்.
Reviewed by Editor
on
October 05, 2022
Rating:

