கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண பரீட்சை பெறுபேறுகளை இம்மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.
செயன்முறைப் பரீட்சை நிறைவடைந்துள்ளமையினால் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் பெறுபேறுகளை வெளியிட முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
2021 ஆம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண பரீட்சை கடந்த மே மாதம் நடைபெற்றது.
இந்தப் பரீட்சையில் ஐந்து இலட்சத்து 17 ஆயிரத்து 486 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இம்மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் வெளியாகும் பரீட்சை பெறுபேறு
 
        Reviewed by Editor
        on 
        
November 23, 2022
 
        Rating: 
 
        Reviewed by Editor
        on 
        
November 23, 2022
 
        Rating: 
 