(றிஸ்வான் சாலிஹு)
கடல் பறவைகள் இலக்கிய அமைப்பு ஏற்பாடு செய்த "கடல் பறவைகளின் கொண்டாட்டம்" நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (20) ஒலுவில் பரன் தோட்டம் வளாகத்தில் அமைப்பின் தலைவி கவிதாயினி க.ஷியா தலைமையில் மிகவும் கோலாகலமான முறையில் நடந்தேறியது.
நிகழ்வில் பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.சீ.எம்.அஹமட் சாபீர் அவர்களும், கெளரவ அதிதியாக அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம். றின்சான் அவர்களும், விசேட அதிதிகளாக கலாசார உத்தியோகத்தர்களான திருமதி பற்பராசா, திருமதி ரஜாயா உட்பட கவிஞர்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
நிகழ்வில் தலைமை உரையாற்றிய கவிதாயினி ஷியா தனதுரையில்...
பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய பிரதேச செயலாளர் தனதுரையில்...
நிகழ்வை அலங்கரிக்கும் முகமாக ஒலுவில் இலாஹியா முன்பள்ளி மழலைச் செல்வங்களின் அறபு பாடலுக்கான நடனமும், நவாஸ் ஷரபி அவர்களின் இயக்கத்தில் உருவான விளைச்சல் எனும் தலைப்பிலான நாடகமும் அரங்கேறியது.
அத்தோடு, ஆசிரியர் கலைப்பிறை ஜே.வஹாப்தீன் தலைமையில் நடைபெற்ற பட்டிமன்றம், ஆசிரியர் மருதமுனை மூஸா விஜிலி தொகுத்து வழங்கிய "இலக்கியமும் இன்றைய நாமும்" கவியரங்கு ஆகியவை வருகை தந்தோரை வெகுவாக கவர்ந்தது.
நிகழ்வின் சிறப்பம்சங்களின் ஒன்றான பாத்திமா மௌனா ரூமியின் "காத்திரு காற்று எத்திசையிலும் வீசும்" என்ற கவிதை நூலும் வெளியிடப்பட்டதோடு, நிகழ்வின் பிரதம அதிதி உள்ளிட்ட ஏனையோருக்கும் நூலாசிரியரால் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
