இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் அட்டாளைச்சேனை பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட " திகாமடுல்ல முயற்சியாண்மை " என பெயரிடப்பட்ட வர்த்தக கண்காட்சி - 2022, புதன்கிழமை (23) பிரதேச செயலக முன்றலில் இடம்பெற்றது.
இதில் இப்பிரதேசத்தை சேர்ந்த இருபது சிறு தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தியதோடு விற்பனையும் செய்தனர்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரின் வழிகாட்டலில் உதவிப் பிரதேச செயலாளர் சட்டத்தரணி நஹீஜா முஸாபிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. வி. ஜெகதீசன் அவர்களும் கெளரவ அதிதிகளாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜனாப். எம்.ஏ.சி. அகமது ஷாபிர், சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் அம்பாரை மாவட்ட மேற்பார்வை உத்தியோகத்தர் ஐ.எல். நாசர், விசேட அதிதிகளாக அட்டாளைச்சேனை விவசாய விரிவாக்கல் நிலைய விவசாய போதனா ஆசிரியர், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, அட்டாளைச்சேனை கல்வியற் கல்லூரியின் உப பீடாதிபதி, அட்டாளைச்சேனை கமநல சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலக கணக்காளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக உத்தியோகத்தர், நிருவாக கிராம உத்தியோகத்தர், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.
Reviewed by Editor
on
November 23, 2022
Rating:



