அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கிடையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி

(சியாத் எம். இஸ்மாயில் )

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் நலன்புரி சங்கம் ஏற்பாடு செய்த அதன் உறுப்பினர்களுக்கிடையிலான கிரிக்கட் தொடர் நலன்புரி சங்கத்தின் தலைவர் டாக்டர். ஏ.ஜி.எம்.ஷயீ தலைமையில்  அட்டாளைச்சேனை அஸ் ஸஹ்ரா வித்தியாலய மைதானத்தில் சனிக்கிழமை (29) இடம்பெற்றது. 

துணை மருத்துவ சேவை பிரிவு, அலுவலகப் பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, பொது வைத்திய பிரிவு, சத்திர சிகிச்சைப் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு என ஆறு அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு நடாத்தப்பட்ட இத்தொடரில், குழு A யிலிருந்து துணை மருத்துவ சேவைப் பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு ஆகிய இரு அணிகளையும் வீழ்த்தி அலுவலகப் பிரிவு அணியினரும் குழு B யிலிருந்து பொது வைத்திய பிரிவு, சத்திர சிகிச்சைப் பிரிவு ஆகிய இரு அணிகளையும் வீழ்த்தி அவசர சிகிச்சை பிரிவு அணியினரும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றனர்.

இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவசர சிகிச்சைப் பிரிவு அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 5 ஓவர்களில் ஆட்டமிழப்புக்கள் எதுவுமின்றி 90 ஓட்டங்களை அபாரமாகக் குவித்தனர். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அலுவலகப் பிரிவு அணியினர் 5 ஓவர்களில் 50 ஓட்டங்களை மாத்திரமே பெற, அவசர சிகிச்சை பிரிவு அணியினர் 40 ஓட்டங்களினால் வெற்றியைத் தழுவிக் கொண்டனர்.

தொடரின் நாயகனாக பீ.ரீ.சிஹாப்டீன், இறுதிப் போட்டியின் நாயகனாக எஸ்.முபீல், சிறந்த பந்து வீச்சாளராக ஜே.அஜ்மீர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்நிகழ்வுக்குப் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஜி.போல் ரொஷான், அதிதிகளாக அரச மருத்துவ அதிகாரிகள் கிளை சங்கத்தின் தலைவரும் சத்திர சிகிச்சை நிபுணருமான டாக்டர். றிப்ஸான் ஜெமீல், சிறு பிள்ளை வைத்திய நிபுணர் டாக்டர். இன்பாக் லுதுப்டீன், பொது வைத்திய நிபுணர் டாக்டர். ஏ.ஏ.யி. நுவன் மதுஷங்க, நலன்புரிச்சங்கத்தின் உப தலைவர் டாக்டர். எஸ்.அபுல் ஹூதா, செயலாளர் ஏ.சி.நக்கீப்,  அரச மருத்துவ அதிகாரிகள் கிளை சங்கத்தின் செயலாளர் டாக்டர். ஏ.சீ.அப்துல் றசாக், தாதிய பரிபாலகர். பீ.ரீ.நௌபர் மற்றும் ஏனைய வைத்தியர்கள், ஏனைய சிரேஷ்ட உத்தியோகத்தர்கள், சுகாதார ஊழியர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.







அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கிடையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கிடையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி Reviewed by Editor on November 01, 2022 Rating: 5