(ஏ.எச்.எம்.சிஹார்)
மொனராகலை அல்-இர்ஷாத் பாடசாலையில் சேவையாற்றம் ஏ.ஜே.எம். றமீஸ் ஆசிரியரின் முயற்சி மற்றும் வேண்டுளுக்கிணங்க எப்.சி.டி நிறுவனத்தின் மூலம் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் உணவுப் பொதிகள் கையளிக்கும் வைபவம் நேற்று (28) திங்கட்கிழமை பாடசாலையின் பிரதான மண்டபத்தில் அதிபர் எம்.எச்.எம் முபாரக் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு மெதகம பிரதேச செயலக உதவிச் செயலாளர் அவர்கள் சிறப்பதிதியாகவும், எம்.எப்.சி.டி நிறுவன பணிப்பாளர், திட்ட முகாமையாளர், நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன்,
இவ்வைபவத்தினை சிறப்பாக நடாத்த உதவி செய்த பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், மெதகம ஜனாஷா நலன்புரிச் சங்கம் என்பவற்றுக்கு அதிபர் முபாரக் நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
November 29, 2022
Rating:




