தனி நபர் சதுரங்க போட்டியில் முதலிடம் பெற்று தேசிய மட்டத்திற்குத் தெரிவு

(பி.எம்.எம்.ஏ.காதர்)

மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலய மாணவி முகம்மது சமீம் ஆயிஷா அயானா மாகாண மட்ட தனிநபர் சதுரங்க போட்டியில்  15 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சம்பியனாகி தேசிய மட்டப்போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சாய்ந்தமருது மழ்கறுல் ஷம்ஸ் வித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்ற மாகாண மட்டப்போட்டியிலேயே இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவருக்கான விருது மற்றும் சான்றிதழ் என்பவற்றை பாடசாலை அதிபர் ஐ.உபைதுல்லா அண்மையில் (08) வழங்கி வைத்தார். 

கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் ஆர்வம் காட்டிவரும் இம்மாணவி மருதமுனையைச் சேர்ந்த சத்திரசிகிச்சை நிபுணர் டொக்டர் ஏ.டபள்யு. முகம்மது சமீம், மெஸ்பானி தம்பதியின் புதல்வியாவார்.



தனி நபர் சதுரங்க போட்டியில் முதலிடம் பெற்று தேசிய மட்டத்திற்குத் தெரிவு தனி நபர் சதுரங்க போட்டியில் முதலிடம் பெற்று தேசிய மட்டத்திற்குத் தெரிவு Reviewed by Editor on November 18, 2022 Rating: 5