இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலிசங்குடன் சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று (16) புதன்கிழமை இடம்பெற்ற இச்சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் வரை நீடித்தது. இதில், இருதரப்பு இணக்கப்பாடுகள் குறித்து இருவரும் கலந்துரையாடினர்.
சுற்றாடல் சார்பான திட்டங்களை அமுல்படுத்துவதற்காக அமெரிக்காவின் ஒத்துழைப்பை வலியறுத்திய அமைச்சர், காலநிலையை பாதுகாக்கும் சதுப்பு நிலத்திட்டங்கள் குறித்தும், அமெரிக்க தூதுவரின் அவதானத்துக்கு கொண்டு வந்தார்.
மேலும்,சுற்றாடல் அமைச்சின் செயற்பாடுகளை ஆக்கத்திறனுள்ளதாக்கும் பொருட்டு, அமைச்சின் கட்டடங்களை உச்ச தரத்தில் நிர்மாணிப்பது பற்றியும் இவ்விருவரும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
மேலும்,எகிப்தில் நடைபெற்ற காலநிலை மாநாடு இன்னும் இந்தோனேஷியாவின் பாலித் தீவில் நடைபெறும் ஜி 20 மாநாடுகளின் தீர்மானங்களிலும் கவனம் செலுத்தப்பட்டது. பொதுவாக உணவுப் பஞ்சம் குறித்து எச்சரிக்கப்படுவதால் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னாயத்தங்களிலும் இச்சந்திப்பு கவனம் செலுத்தியது.
 
        Reviewed by Editor
        on 
        
November 17, 2022
 
        Rating: 
 