காத்தான்குடி நகர சபை உறுப்பினராக காலிதீன் சத்தியப்பிரமாணம்

2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பில் பட்டியல் வேட்பாளராக போட்டியிட்ட அகமதுலெப்பை முகம்மது காலித்தீன் இன்று (6) ஞாயிற்றுக்கிழமை ஶ்ரீலங்கா முஸலிம் காங்கிரஸ் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் தலைவர் றஊப் ஹக்கீம் முன்னிலையில் காத்தான்குடி நகர சபை உறுப்பினராக சத்தியப் பிரமானம் செய்து கொண்டார்.

இந்நிகழ்வில் கட்சி செயலாளர் நிசாம் காரியப்பர், ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் செயலாளர் நைமுல்லாஹ், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், முன்னாள் ராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மெளலானா, முன்னாள் காத்தான்குடி நகரபிதா மர்சூக் அஹமட் லெப்பை, ஏறாவூர் நகரபிதா நழீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.





காத்தான்குடி நகர சபை உறுப்பினராக காலிதீன் சத்தியப்பிரமாணம் காத்தான்குடி நகர சபை உறுப்பினராக  காலிதீன் சத்தியப்பிரமாணம் Reviewed by Editor on November 06, 2022 Rating: 5