அஸ்மியா நிஸாம் எழுதிய கவிதை நூல் அறிமுக விழா

(றிஸ்வான் சாலிஹு)

கரவாகு கலை இலக்கிய மன்றம் மற்றும் வியூகம் ஊடக வலையமைப்பு ஏற்பாட்டில் அக்குறனை அஸ்மியா நிஸாம் எழுதிய "மனிதம் இல்லா பூமி" கவிதை நூல் அறிமுக விழா எதிர்வரும் சனிக்கிழமை (12) காலை 9.00 மணிக்கு மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

கவிஞர் பாவேந்தல் பாலமுனை பாறூக்  தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் கலை இலக்கிய சிறப்பு அதிதிகள் பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.

இந்நிகழ்வில் கிழக்கிழங்கை இலக்கிய ஆர்வாளர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டு குழுவினர் அன்புடன் அழைக்கின்றார்கள்.



அஸ்மியா நிஸாம் எழுதிய கவிதை நூல் அறிமுக விழா அஸ்மியா நிஸாம் எழுதிய கவிதை நூல் அறிமுக விழா Reviewed by Editor on November 08, 2022 Rating: 5