ஐந்தாவது புதிய வேந்தராக கலாநிதி பாயிஸ் முஸ்தபா

ஜனாதிபதி சட்டத்தரணி, கலாநிதி. பாயிஸ் முஸ்தபா அவர்கள் 2022.11.20 ஆம் திகதி முதல் செயற்படும் வகையில் ஐந்து ஆண்டுகளுக்கு இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 05வது வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருடைய நியமனமானது 1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் திருத்தப்பட்ட ஏற்பாடுகளுக்கமைய அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவருக்கு முன்னர், திருமதி. ஜெஸிமா இஸ்மாயில் (2002-2007) மற்றும் பேராசிரியர் அச்சி எம் இஷாக் (2007-2022) ஆகியோர் வேந்தராக சேவையாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




ஐந்தாவது புதிய வேந்தராக கலாநிதி பாயிஸ் முஸ்தபா ஐந்தாவது புதிய வேந்தராக கலாநிதி பாயிஸ் முஸ்தபா Reviewed by Editor on November 17, 2022 Rating: 5