கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பின் மூலம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல ஊர்களுக்கு பலதரப்பட்ட மனிதநேயப்பணிளைத் தொடர்ச்சியாக செய்துவருகின்றது.
அந்த வகையில் கல்முனை மஸ்ஜிதுல் ஆலி பள்ளிவாசலுக்கு மிக நீண்டகாலமாக Water Filter (நீர் வடிகட்டி இயந்திரம்) தேவைப்பாடு இருந்த காரணத்தை பள்ளி நிர்வாகத்தினர்கள் ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பிடம் இது சம்மந்தமான கோரிக்கை ஒன்றினை முன்வைத்திருந்தனர்.
அக்கோரிக்கையினை ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும், கல்முனை மாநகரசபையின் பிரதிமுதல்வரும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் ஏற்றுக்கொண்டு மிகவும் குறுகிய நாட்களுக்குள் குறிப்பிட்ட Water Filter (நீர் வடிகட்டி இயந்திரம்) பள்ளியின் தலைவர் எம். எம். பரீட், செயலாளர் யூ. எல். அஸாருதீன், பொருலாளர் ஐ. எல். சம்ஸுதீன், மற்றும் பள்ளி நிர்வாகத்தினர்களிடம் கையளித்து வைத்தார்.
இந்நிகழ்வானது வை.டபிள்யூ.எம்.ஏ பேரவையின் அனுசரணையில் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் ரஹ்மத் பவுண்டேஷன் தலைவர் ரஹ்மத் மன்சூர் அவர்களுடன் பவுண்டேஷனின் உறுப்பினர்களும், பள்ளி நிர்வாகிகள், நலன்விரும்பிகள், புத்தி ஜீவிகள் என மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
Reviewed by Editor
on
December 01, 2022
Rating:
